மணிமுத்தாறு நதியும், வெள்ளாறும் இங்கு கூடுவதால் கூடலையாற்றூர் என்று பெயர் பெற்றது. சுந்தரர் விருத்தாசலம் செல்லும்போது அவர்முன் சிவபெருமான் அந்தணர் வடிவம் கொண்டு எதிரில் வந்தார். சுந்தரர் விருத்தாசலத்திற்கு வழிகேட்க, அந்தணராக வந்த சிவபெருமான் கூடலையாற்றுர் கோயிலுக்கு வழிகாட்டி தானும் உடன்வந்து மறைந்தருளினார்.
பிரம்மதேவனுக்கு சிவபெருமான் நர்த்தனம் ஆடிக் காட்டியதால் இத்தலத்து இறைவனுக்கு 'நர்த்தனவல்லபேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. இரண்டு அம்பாள் சன்னதிகளில் பராசக்தி அம்மன் சன்னதியில் திருநீறும், ஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும் பிரசாதமாகத் தரப்படுகிறது.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகப் பெருமானைப் பாடியுள்ளார். காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : கீர்த்திவாசன் குருக்கள் - 97867 34652, 04144-208704. தற்போது (2015) கும்பாபிஷேகத் திருப்பணி நடைபெற்று வருகிறது. அன்பர்கள் உதவி செய்யலாம்.
|